ஞாயிறு, 22 செப்டம்பர், 2019


சுவரு

பெருங்களத்தூரில்  இறங்கி வந்த முதல் பஸ்ஸில் ஏறி கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டேன்

காலை நேரம் வேலைக்கு பள்ளிக்கு செல்பவர்களால் பஸ் நிறைந்து விட்டது

மிகுந்த சிரமப்பட்டு உள்ளே வந்தவரை
யோவ் காலை மெரிக்காமா தள்ளி போயா என்று கண்டக்டர் நெட்டி தள்ளியதில் ஒரு கையில் பையோடு தடுமாறி நிலைகுலைந்து சமாளித்து பெண்கள் போல் சீட்டு கம்பியை பிடித்து கொண்டார்.

பல்லை கடித்து பொருப்பதும் மீறி வலி கண்ணில்  தெரிகிறது, சங்கடத்தை மறைத்து கொண்டு வெளியில் பார்க்கிறார் வயது 40க்கு
மேல் இருக்கும் சராசரி உயரம் நோயில் முகம் வாடி வெளிரி இருந்தார்.

அருகில் இருந்த பெரியவர் 60 வயது இருக்கும் கைகள் எல்லாம் காய்ப்பு மணி கட்டு பெரியதாக உள்ளங்கை அகலாமாக ஏதோ கை கொண்டு கடுமையாக வேலை செய்பவாராக இருக்க வேண்டும்

சார் தடுமாறாம மேலே கம்பிய பிடியுங்கள் என்றார் பெரியவர்

அவர் வெறித்துப் பார்த்துக் கொண்டு இரண்டு கையும் மாருக்கு மேலே தூக்க முடியல வலி
உயிர் போவுது ஆஸ்பத்திரிக்கு தாங்க  போறேன்

சார் நீங்க உட்காருங்க என்று உடன் எழுந்து
கொண்டார்

அமர்ந்து இருந்த நான் வெட்க்கி போனேன்.

இந்த வயதிலும் நைட் ஷிப்ட் பார்த்துட்டு போறேன் டயர் பஞ்சர் ஒட்டதறது தான் வேலை

உடம்பு வலிக்க வேலை செய்தா நோவு வராது
சார், கிராமத்துல சொல்லுவாங்க சுவரு இருந்தா தான் சித்திரம்முனு நல்ல டாக்டரா
பார்த்து காட்டுங்க என்று சொல்லி சென்றார்

நான் சினேகமாக பார்த்ததும்

நிறைய டாக்டர்ட்ட காண்பித்து விட்டேன் ஒன்றும் சரியாக மாட்டேங்குது இந்த டாக்டர்
காட்டினால் நல்லாகுமா தெரியல

எவ்வளவு நாளா இருக்கு சார்

மூன்று மாசமா உயிர் வாதனையாக இருக்கு
சார்

கையை ஆறுதலா பிடித்து சார் மூட்டு வலி
எல்லாம் ஆயுர்வேத மருந்துக்கு தான் கொஞ்சம் கட்டு படும் அதுவும் பூரா குணமாக்கறது கஷ்டம் நீங்கள் டிரை பண்ணி பாருங்க இந்த பஸ் அண்ணா நகர் போகுமா

அய்யோயோ இது போவாது சார் வர ஸ்டாப்பில் இறங்கி கேட்டு ஏறுங்கள் சார்

காலையிலே வந்துட்டானுவ சிக்கிரம் இறங்குயா என்றார் கண்டக்டர்

இறங்கி சமாளித்து நின்றேன் ஒரு கால் வலித்தது......

வேலு
12/01/2016
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக